search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் நிவாரண நிதி"

    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியது. GajaCyclone #GajaCycloneRelief #CPI
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #CPI
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ருபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. GajaCyclone #GajaCycloneRelief #Kerela #PinaryiVijayan
    திருவனந்தபுரம்:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கஜா புயலால் பாதிப்படைந்த தமிழக மக்களுக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார்.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு 10 கோடி ரூபாய் வழங்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கஜா புயல் பாதிப்புக்கு உதவும்படி கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் கடிதம் மூலம்  வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #GajaCycloneRelief #Kerela #PinaryiVijayan
    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள கவர்னர் சதாசிவம் ஒரு லட்சம் ருபாய் வழங்கினார். GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    திருவனந்தபுரம்:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.30 கோடி ருபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவம்  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ருபாய் வழங்கியுள்ளது. GajaCyclone #GajaCycloneRelief #AIADMK
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    கஜா புயல் நிவாரணத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய்க்கான நிதியை முதலமைச்சர் பழனிசாமியிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று வழங்கினார்.

    இதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் உதயகுமார் இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #AIADMK
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் 15 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். GajaCyclone #GajaCycloneRelief #AjithKumar
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை பார்வையிட்டு வருகின்றனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief#AjithKumar
    கேரளாவில் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வந்த நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது. #KeralaFloods #KeralaReliefFund
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 28-ந் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 14 பேர் காணாமல்போய் உள்ளனர். இந்த பேரிடரால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஆண்டு திட்ட மதிப்பீடான ரூ.37,247.99 கோடியைவிட இழப்பு மிக அதிகமாக உள்ளது.



    இதற்காக மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. பேரழிவின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு அளிக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நேற்று முன்தினம் வரை ரூ.730 கோடி கிடைத்திருந்தது. இதுதவிர நிலமாகவும், நகைகளாகவும் நிவாரண நிதிக்கு கிடைத்தது.

    இந்நிலையில் கேரள மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.145 கோடி வரையில் பல்வேறு வங்கிகளின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KeralaFloods #KeralaReliefFund
    ×